நயன்தாரா படத்தில் கெளதம்மேனன் வில்லனாக நடிப்பது உண்மையா?

  • IndiaGlitz, [Monday,September 12 2016]

டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கெளதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளதாக கடந்த இரு நாட்களாக செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து படக்குழுவினர் கூறியபோது, 'இயக்குனர் கெளதம் மேனனை வில்லன் உள்பட எந்த கேரக்டரிலும் நடிக்க அணுகவில்லை என்றும் இது முழுக்க முழுக்க ஆதாரமில்லாத செய்தி என்றும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
ரொமாண்டிக் ஆக்சன் த்ரில்லராக உருவாகவுள்ள இந்த படத்தை 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தை தயாரித்த ஜெயகுமர் தயாரிக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதும் இந்த படத்திற்கு புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது

More News

காவிரி பிரச்சனையில் நாம் செய்ய வேண்டியது என்ன? சிம்பு அறிக்கை

காவிரி நீர் பிரச்சனையால் தமிழகம் மற்றும் கர்நாடக மக்களின் ஒற்றுமைக்கு பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பிரச்சனையை பயன்படுத்தி ஒருசிலர் வேண்டாத வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

'சாமி 2'-க்கு முன்னர் விக்ரம் நடிக்கும் புதிய படம்

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'இருமுகன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் கடந்த நான்கு நாட்களாக உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வெற்றிப்படம் என்பதை உறுதி செய்துள்ளது.

முருகதாஸ் படத்தில் மகேஷ் பாபுவுக்கு என்ன வேடம்? தகவல்கள் உள்ளே

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'தல 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது

விஜய்-அட்லி படத்தின் இசையமைப்பாளர் யார்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படமான 'பைரவா' படத்தை அடுத்து அவர் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது

'தொடரி' சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் சற்று முன்னர் தணிக்கை செய்யப்பட்டது.