'கோப்ரா' ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர்: விக்ரம் ரசிகர்கள் குஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படப்பிடிப்பு முடிந்ததாக இயக்குனர் அஜய் ஞானமுத்து உறுதி செய்தார் என்பதையும் அவர் தனது டுவிட்டரில் தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் வெளிவரவில்லை என்றும் மற்ற படங்களின் ரிலீஸ் தேதிகள் வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ’கோப்ரா’ படத்தின் ரிலீஸ் தேதியையும் சீக்கிரமாக சொல்லுங்கள் என்று இயக்குனருக்கு ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து உடனடியாக அவருக்கு பதில் அளிக்கும் வகையில் மே 26-ஆம் தேதி ’கோப்ரா’ படத்தை திரையிட திட்டமிட்டு இருப்பதாகவும் இன்னும் மூன்று மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து மே 26-ஆம் தேதி ’கோப்ரா’ படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விக்ரம் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்
விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Planning May 26th!! 3 months to go ???? https://t.co/kPXKr9Lw7w
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) February 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com