ரஜினி பட தலைப்பை தேர்வு செய்தது ஏன்? உதயநிதி பட இயக்குனர் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,January 19 2016]

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் ரிலீஸாகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு ரஜினியின் பட தலைப்பான 'மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் 'மனிதன்' தலைப்பை தேர்வு செய்தது ஏன்? என்பது குறித்து இந்த படத்தை இயக்கி வரும் இயக்குனர் அஹ்மத் விளக்கம் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் நாயகன் வாழ்க்கையில் பல தவறுகள் செய்பவராக இருப்பதாகவும், பின்னர் ஒரு கட்டத்தில் திருந்தி நல்ல மனிதனாக மாறி விடுவதாகவும், எனவே இந்த படத்தின் கதைக்கு 'மனிதன்' என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என கருதியதால் 'ரஜினியின் 'மனிதன்' படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் முறைப்படி இந்த தலைப்பிற்கு அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதாகவும் அஹ்மத் கூறியுள்ளார்.

இந்தியில் சூப்பர் ஹிட் ஆகிய 'ஜாலி எல்.எல்.பி' என்ற படத்தின் ரீமேக்காக இருந்தாலும் இந்த படத்தின் திரைக்கதைக்காக தான் கடுமையாக உழைத்துள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தில் நீதிமன்ற காட்சிகள் உள்பட பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாகவும், இன்னும் இரண்டு பாடல்களும் ஒருசில காட்சிகளும் மட்டுமே படமாக்க உள்ளதாகவும் அஹ்மத் மேலும் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ், விவேக், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவும், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பும் செய்கின்றனர்.

More News

அரசியல் கட்சியின் தெருமுனை கூட்டத்தில் பேசிய நடிகர் தனுஷ்

தனுஷ் முதன்முதலாக அண்ணன் - தம்பி என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் 'கொடி' என்ற படத்தில் நடித்து வருகிறார்....

விஜய்சேதுபதி படத்திற்கு விஜய் எதிர்ப்பு

'சூது கவ்வும்' இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன் மற்றும் சமுத்திரகனி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் 'காதலும் கடந்துபோகும்'...

நயன்தாரா மீது நம்பிக்கை வைத்திருக்கும் பாண்டியராஜ்

''பசங்க 2'', ''கதகளி'' ஆகிய இரண்டு ஹிட் படங்களை அடுத்து இயக்குனர் பாண்டியராஜ் அடுத்ததாக சிம்பு, நயன்தாரா நடித்த ''இது நம்ம ஆளு'' படத்தை முடித்து வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறார்....

'இது நம்ம ஆளு' ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது..

'பிச்சைக்காரன்' பட பாடலில் சர்ச்சைக்குரிய கருத்து. டாக்டர்கள் சங்கம் கண்டனம்

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'பிச்சைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது..