close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் இயக்குனர் அகத்தியனின் குடும்ப புகைப்படங்கள்!

Friday, January 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் முதன் முதலாக இயக்குனருக்கான தேசிய விருதை பெற்ற பெருமை இயக்குனர் அகத்தியனுக்கு உண்டு. அஜித், தேவயானி நடித்த ’காதல் கோட்டை’ என்ற திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அகத்தியன் மற்றும் அவரது மூன்று மகள்களுடன் கூடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இயக்குனர் அகத்தியனுக்கு கனி, விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளான கனி, இயக்குனர் திரு என்பவரையும், இரண்டாவது மகளான விஜயலஷ்மி இயக்குனர் ஃபெரோஸ் என்பவரையும் திருமணம் செய்துள்ளனர். விரைவில் அவருடைய மூன்றாவது மகளான நிரஞ்சனிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. அந்த வகையில் இயக்குனர் அகத்தியனின் 3 மருமகன்களுமே இயக்குனர்கள் என்பது ஒரு ஆச்சரியமான ஒற்றுமையாக கோலிவுட்டில் பார்க்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இயக்குனர் அகத்தியன் தனது மூன்று மகன்களுடனும், மூன்று மகள்களும் தனித்தனியே மற்றும் ஒற்றுமையாக இருந்த புகைப்படங்களும் அவர்களது குழந்தைகளின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment