சினிமா புரியாதவர்கள் தேசிய விருது கமிட்டியில் உள்ளனர்: பிரபல இயக்குனரின் சர்ச்சை பேச்சு!
- IndiaGlitz, [Tuesday,August 02 2022]
சினிமா பற்றிய புரிதல் இல்லாதவர்கள் தான் தேசிய விருது கமிட்டியில் உள்ளனர் என்றும் அதனால்தான் விருதுக்கு தேர்ந்து எடுக்கும் படங்கள் தகுதியானதாக இல்லை என்றும் பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல மலையாள இயக்குனர் மற்றும் தேசிய விருது பெற்றவர் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவருடைய படங்கள் மலையாள திரை உலகில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இந்த நிலையில் மலையாள சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் ’தேசிய திரைப்பட விருது கமிட்டியில் சினிமா புரியாதவர்கள் தான் இருக்கிறார்கள் என்றும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விருது கொடுக்கிறார்கள் என்றும், ஒரு படத்தை விருதுக்கு தேர்வு செய்ய என்ன அளவுகோல் என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் தேசிய விருது கமிட்டியில் புகழ்பெற்ற இயக்குனர், விமர்சகர்கள், கலைஞர்கள் நடுவர்களாக இருந்தார்கள் என்றும் இப்போது யார் இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை என்றும் அவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எந்த படத்திற்கு என்ன விருது கொடுக்க வேண்டும் என்ற அளவுகோல் தெரியாமல் பிளாக்பஸ்டர் படங்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுவது நகைச்சுவையாக உள்ளது என்றும் இதை எதிர்த்து கேள்வி கேட்டால் என்ன நடக்கும் என்று அனைவருக்கும் தெரியும் என்றும், இது ஒரு மிகப்பெரிய அநியாயம் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல என்றும் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் எந்த திரைப்படத்தை மனதில் வைத்து இதைபேசியிருப்பார் என்பது குறித்து கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்.