போலந்து பல்கலைக்கழக மாணவர்களை கவர்ந்த 'உறியடி' திரைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் ஒன்று இளையதலைமுறை இயக்குனர் விஜய்குமார் இயக்கிய 'உறியடி.' இந்த படத்திற்கு ரசிகர்கள், சமூக இணையதளங்கள், பத்திரிகைகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் போலந்து நாட்டில் உள்ள University of Wroclawski என்ற பல்கலைகழகத்தில் படிக்கும் அரசியல் அறிவியல் மாணவர்களுக்கு இந்த படம் சமீபதில் திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பிரிவின் எக்ஸிகியூட்டிவ் உறுப்பினர்கள் இயக்குனர் விஜய்குமாருக்கு பாராட்டு தெரிவித்து நன்றிக்கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதில் தங்கள் பல்கலையின் மாணவர்களுக்கு 'உறியடி' படத்தை போட்டுக்காண்பிக்க அனுமதி கொடுத்த இயக்குனருக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த படம் மாணவர்களுக்கு ஒரு பெரும் படிப்பினையாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தை பார்த்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சாதி அரசியல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
கடத ஆண்டு வெளியான 'உறியடி' திரைப்படம் 'சாதித் தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் அரசியல் வேட்கையையும் சுயநலத்தையும் தோலுரித்துக் காட்டி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout