close
Choose your channels

திமுகவில் போட்டியிட விருப்பமனு வாங்கிய தமிழ் திரைப்பட இயக்குனர்!

Sunday, February 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனரான போஸ் வெங்கட் திமுகவில் போட்டியிட விருப்ப மனு வாங்கியுள்ள தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ’ஈரநிலம்’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிய போஸ் வெங்கட், அதன் பின்னர் தீபாவளி, சிவாஜி, சரோஜா, சிவப்பு மழை, சிங்கம், கோ , தேவராட்டம், கவண், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் நடித்த காவல்துறை அதிகாரி கேரக்டருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்துள்ள இவர் கடந்த ஆண்டு வெளியான ’கன்னிமாடம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர், இயக்குனர் போஸ் வெங்கட் தற்போது திமுகவில் போட்டியிட விருப்ப மனுவை பெற்றுள்ளார். இவர் திமுக வேட்பாளராக அறந்தாங்கியில் போட்டியிட விருப்பமனு பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

திமுகவில் போட்டியிட நடிகர், இயக்குனர் போஸ் வெங்கட்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா? அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment