கமல்ஹாசனை அடுத்து ஊழலை வெளிப்படுத்திய துணிச்சலான இயக்குனர்
Friday, July 21, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கின்றது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆணித்தரமாக கூறினார். 'இவர் எல்லாம் ஒரு ஆளா? என்று முதலில் உதாசினப்படுத்திய அமைச்சர்கள், கமலின் துணிச்சலை கண்டு பயந்து உடனே ஊழல் நடந்ததாக ஆதாரத்துடன் நிரூபித்தால். நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினர்.
இதற்கு பதிலடியாக தனது அறிக்கையில் 'வரிவிலக்கு பெற லஞ்சம் வாங்குவதாகவும் தன்னை போல் ஒருசிலரை தவிர பலர் லஞ்சம் கொடுத்தே வரிவிலக்கு பெறுவதாகவும் கமல்ஹாசன் வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். இதேபோல் பல்வேறு துறைகளில் தங்களுக்கு நிகழ்ந்த ஊழல் அனுபவங்களை பொதுமக்கள் வெளிப்படுத்தலாம் என்றும், இது டிஜிட்டல் யுகம் என்பதால் டிஜிட்டல் மூலமே தெரிவிக்கவும் என்றும் கமல்ஹாசன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்
கமலின் இந்த அறிக்கை உடனே வேலை செய்ய ஆரம்பித்தது. மதுரையை சேர்ந்த கமல் ரசிகர் மன்ற தலைவர் அழகர் என்பவர் ரேசன் கடைகளில் நடந்த ஊழல்கள் குறித்து சுமார் 2 ஆயிரம் பேரிடம் புகார் மனுக்களை பெற்று உணவுத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் திரைத்துறையை சேர்ந்த ஒருவரும் தற்போது ஊழலை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் பாலாவிடம் இணை இயக்குனராக இருந்தவரும், ஆச்சார்யா, 'என்ன தான் பேசுவதோ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆச்சாரியா ரவி தனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவத்தை தற்போது தெரிவித்துள்ளார். தன்னுடைய படம் ஒன்றுக்கு வரிவிலக்கு அளிக்க குழுவினர் அனுமதி அளித்துவிட்ட போதிலும் லஞ்சம் கொடுக்காத காரணத்தால் வரிவிலக்கை பெற மூன்று மாதங்கள் தன்னை அலைய விட்டதாகவும், இறுதியில் ரூ.35000 கொடுத்த பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சர் கையெழுத்திட்டதாகவும் கூறினார்.
எதிர்க்கட்சிகள் இத்தனை வருடங்களில் ஏற்படுத்தாத விழிப்புணர்வை கமல்ஹாசனின் ஒரே ஒரு அறிக்கை சாதித்துவிட்டது என்றும், கமல்ஹாசன் போன்ற நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே அனைவரும் விருப்பம் என்றும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments