தனது பட நாயகியை திருமணம் செய்த 60 வயது பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,June 03 2017]

பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன் இன்று சென்னையில் உள்ள பிரிவியூ திரையரங்கில் தான் இயக்கிய 'ஒரு இயக்குனரின் காதல் கதை' பிரிவியூ காட்சியின் போது நடிகை ஷிர்லியுடன் திருமணம் செய்யவுள்ளதை அறிவித்தார். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடிகை ஷெர்லிக்கு மோதிரம் மாற்றிய வேலுபிரபாகரன், விரைவில் பதிவு திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

வேலுபிரபாகரன் கடந்த 2009ஆம் ஆண்டு இயக்கிய 'இது காதல் கதை ' என்ற படத்தில் நடித்தவர் நடிகை ஷெர்லி என்பவர் குறிப்பிடத்தக்கது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தோழியாக இருந்து வந்த 35 வயது ஷெர்லியை இன்று தனது 60வது பிறந்த நாளில் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.