சூப்பர் ஸ்டாரா? பாலிவுட் சூப்பர் ஸ்டாரா? ரஜினி குறித்து குழம்பிய இயக்குனர் பியர் கிரில்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் இந்த படத்தை டிஸ்கவரி சேனலுக்காக பியர் கிரில்ஸ் என்ற இயக்குனர் இயக்கினார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்று இயக்குனர் பியர் கிரில்ஸ் அவர்கள் தனது சமூக வலைப்பக்கத்தில் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து அதில் ’இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான நிகழ்ச்சிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைத்துள்ளேன். மேலும் நரேந்திர மோடியுடனான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிய போது தொலைக்காட்சி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் 3.6 பில்லியன் பார்வையாளர்கள் கிடைத்து சாதனை படைக்க முடிந்தது 'என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக இந்த டுவீட்டில் ரஜினியை குறிப்பிடும்போது முதலில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் என்று குறிப்பிட்டு, அதன் பின்னர் அதனை திருத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
After our episode with Prime Minister @NarendraModi of India helped create a bit of TV history, (3.6 billion impressions), superstar @Rajinikanth joins me next, as he makes his TV debut on our new show #IntoTheWildWithBearGrylls on @DiscoveryIN. #ThalaivaOnDiscovery pic.twitter.com/WKscCDjPZc
— Bear Grylls (@BearGrylls) January 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments