ZEE5 தளத்தில் வெளியாகும் நேரடி திரைப்படம்.. ஜனவரி 12 முதல் இலவசமாக ஸ்ட்ரீம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ZEE5 தளம் அதன் அஜய் கர்துர்வார் நடிப்பில் 'அஜய் காடு' என்ற தெலுங்கு படத்தினை நேரடி டிஜிட்டல் பிரீமியராக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம், தனது நேரடி-டிஜிட்டல் தெலுங்கு திரைப்படமான ‘அஜய் காடு’ படத்தினை ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்து வருவதாக அறிவித்துள்ளது. சந்தனா கோபிசெட்டியுடன் இணைந்து அஜய் குமார் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் அஜய் கர்தூர்வர் இப்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் பன்முக நடிகர் அஜய் குமார், தெலுங்கு பிக் பாஸ் புகழ் பானு ஸ்ரீ மற்றும் ரோடீஸ் வெற்றியாளர் ஸ்வேதா மேத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் திறமைமிகு நடிகர்களான பிராச்சி தாக்கர், அபய் பெத்திகாண்டி, ஜெயஸ்ரீ கரு மற்றும் யதம் ராஜு ஆகியோரும் நடித்துள்ளனர்.
'அஜய் காடு' அஜய் எனும் நடுத்தர வர்க்க இளைஞன் , பணம், புகழ் மற்றும் காதல் என அனைத்தும் புது வடிவமெடுக்கும் வேகமான உலகத்திற்கு ஏற்ப, மாற முயற்சிக்கும் கதையை விவரிக்கிறது. வாழ்வின் மீதான வெறுப்பில் நம்பிக்கையைக் கைவிடும் அஜய், போதைக்கு அடிமையான மருத்துவரான ஸ்வேதாவை சந்திக்கிறான். அவன் வாழ்வு மாற்றத்திற்குள்ளாகிறது. அஜய் தனது உள் மனப் போராட்டங்களை எதிர்கொள்வதையும் மற்றும் வெளி உலகத்தால் முன்வைக்கப்படும் சவால்களை எதிர்த்துப் போராடுவதையும் ஒரு நெகிழ்ச்சி மிகு பயணமாக இப்படம் சொல்கிறது. ZEE5 இல் ஜனவரி 12 முதல் படம் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.
படத்தின் பிரீமியர் குறித்து அஜய் கர்துர்வார் கூறியதாவது, ‘அஜய் காடு' படத்திற்காக நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகச் செயல்பட்டது இன்னுமே நம்பமுடியாத த்ரில் பயணமாக இருந்தது. இந்த திரைப்படம் என் இதயத்திற்கு மிக நெருக்கமான, ஒரு சிறப்பு மிகு படைப்பாகும். இந்த அற்புதமான அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளேன், டிரெய்லர், படத்தின் சிறு அறிமுகத்தைத் தரும் படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது! சண்டைக்காட்சிகள், உணர்ச்சிகள் மற்றும் காதல் ஆகியவற்றின் கலவையாக ஒரு தீவிரமான படைப்பை உங்களுடன் பகிர்வதில், உற்சாகமாக உணர்கிறேன். இந்த துடிப்பு மிகு காதல் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லும், ZEE5 உடனான இந்த ஒத்துழைப்பு ஒரு கேம் சேஞ்சர் என்று நான் நம்புகிறேன். ஒரே நாளில் உலகளாவிய பார்வையாளர்களை சென்றடைய இது மிகப்பெரிய பாலமாக அமையும். 'அஜய் காடு' அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும்."
இப்படத்தில் நல்லமல்லா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பானு ஸ்ரீ கூறியதாவது, ‘ஒரு அருமையான படைப்பில் அஜய் கர்தூர்வாருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தனித்துவமான பாத்திரங்கள் மற்றும் அழுத்தமான திரைக்கதைகளால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் அவரது திறன் ஏற்கனவே என் ஆர்வத்தைத் தூண்டியது. படத்தில், பிரியா என்ற ஒரு துடிப்பான மற்றும் சுதந்திரமான இளம் பெண்ணாக நான் நடிக்கிறேன். இப்பாத்திரம் கதைக்கு ஒரு தனித்துவமான சுவை கூட்டும், மேலும் ZEE5 இல் திரைப்படத்திற்கு பார்வையாளர்கள் தரும் வரவேற்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments