உயிர் போகும் என்பது எனக்கு தெரியும்: எழுதி வைத்து உயிர் விட்ட இளைஞர்
Send us your feedback to audioarticles@vaarta.com
’வேகமாக வண்டி ஓட்டினால் உயிர்போகும் என்பது எனக்குத் தெரியும், ஒருவேளை உயிர் போனால் யாரும் அழ வேண்டாம்’ என தனது புது பைக்கில் எழுதி வைத்த வாலிபர் ஒருவர் அதே பைக்கில் விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்த சோகமான சம்பவம் ஒன்று கடலூர் அருகே நடைபெற்றுள்ளது
கடலூர் அருகே டிப்ளமோ படித்து வரும் மாணவ ஆகாஷ். இவர் பல்சர் 220 என்ற பைக்கை ஆசை ஆசையாக வாங்கி தனது நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். மேலும் அவர் ஹெல்மெட் போடவில்லை என்றும், புதுவண்டி எனபதால் ஆர்வம் காரணமாக அளவுக்கு அதிகமான வேகத்தில் சென்று உள்ளார் என்றும் தெரிகிறது
இதனை அடுத்து திடீரென பல்சர் ஆகாஷின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சாலையோரம் இருந்த ஒரு பனை மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். பின்னால் உட்கார்ந்திருந்த அவருடைய நண்பர் படுகாயத்துடன் உயிர்தப்பினார்
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆகாஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர்கள் அந்த பைக்கின் பின்னால் பார்த்தபோது அதில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ’வேகமாக வண்டி ஓட்டினால் உயிர்போகும் என்பது எனக்குத் தெரியும், ஒருவேளை உயிர் போனால் யாரும் அழ வேண்டாம்’வாசகத்தை பார்த்தனர்.
வேகமாக சென்றால் விபத்து ஏற்பட்டு மரணமடைவோம் என்று தெரிந்தும் உயிரின் மதிப்பு தெரியாமல் வேகமாக சென்று மரணம் அடைந்த ஆகாஷூக்கு இரங்கல் தெரிவிப்பது தவிர வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout