இங்க குரூப்பா இருக்குறவங்க வெளியே போனா என்ன செய்வாங்க: ரவீனா கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மூலம் இதுவரை மறைமுகமாக தெரிந்த இரண்டு குரூப்புகள் அப்பட்டமாக வெளியே தெரிந்து குரூப்பாக விளையாடுவது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் மாயா பூர்ணிமா குரூப் குறித்து தினேஷ் - விஷ்ணு குரூப்பினர் பேசும் காட்சிகள் இன்றைய அடுத்த புரோமாவில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக ’நிக்சன் ரொம்ப நெகட்டிவ் ஆக மாறிவிட்டான் என விஷ்ணு சொல்ல, அதற்கு தினேஷ் அவன் டோட்டலா அந்த பக்கம் போயிட்டான் என்று கூறுகிறார்.
அப்போது ரவீனா ’இங்கே உள்ளவங்க, வெளியே போனா அவங்களே ஒண்ணா இருக்க மாட்டாங்க என்று சொல்கிறார். மாயா பூர்ணிமா இரண்டு பேருமே தங்கள் அணியில் உள்ளவர்களை யூஸ் பண்ணுகிறார்கள் என்று விஷ்ணு கூறுகிறார்.
அப்போது ரவீனா ’கடந்த சீசன்களில் எல்லாம் யாராவது எதிர் சைடு உள்ளவர்கள் எலிமினேஷன் ஆனாலும் கூட அவங்களுக்காக உண்மையாக வருத்தம் அடைவதற்கு ஒரு சிலர் இருந்தார்கள். ஆனால் எந்த சீசனில் அப்பாடா ஒரு டிக்கெட் போயிருச்சுன்னு சந்தோசப்படுறாங்க என்று மாயா பூர்ணிமா பற்றி பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளன.
இவை அனைத்துமே உண்மைதான் என பார்வையாளர்களும் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments