வெளியில என்ன பேசுறாங்கன்னு கரெக்டா ஊகித்த தினேஷ்.. மாயா கேங்கிற்கு ஆப்பு?
Send us your feedback to audioarticles@vaarta.com
மாயா கேங்கில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக அராஜகம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த கேங்கில் உள்ளவர்களை ஒவ்வொருவராக வெளியேற்ற வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் கங்கணம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடைய சமூக வலைதள பதிவிலிருந்து தெரிய வருகிறது.
மாயா இந்த வார கேப்டன் என்பதால் அவர் நாமினேஷனில் இல்லை என்றாலும் மாயா கேங்கில் உள்ள பூர்ணிமா மற்றும் ஐஷு ஆகிய இருவரில் ஒருவரை இந்த வாரம் எலிமினேஷன் செய்ய வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தினேஷ், கூல் சுரேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் உரையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தினேஷ், ’வெளியில் மக்கள் இந்த விஷயத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. மாயா கேங் செய்யும் அராஜகத்தை பார்த்து அந்த கேங்கில் உள்ள ஒருவரை வெளியே அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்திருக்கலாம்’ என்று கூறுகிறார்.
மக்கள் வெளியே சமூக வலைதளங்களில் என்ன பதிவு செய்கிறார்களோ, அதை சரியாக தினேஷ் ஊகித்துள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த வாரம் பூர்ணிமா அல்லது ஐஷுவை எலிமினேஷன் செய்து மாயா கேங்கிற்கு ஆப்பு வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Naama ninaikuradha apdiye soltaru pa manushan#Dinesh 🔥#biggbosstamil #biggbosstamil7pic.twitter.com/aUzEhjczHc
— Imadh (@MSimath) November 7, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments