தினேஷின் 'உள்குத்து' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Saturday,November 05 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த தினேஷ், அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது உள்குத்து, மெர்லின், அண்ணனுக்கு ஜே, வாராயோ வெண்ணிலவே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'உள்குத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மேலும் இந்த படம் தற்போது சென்சாரும் ஆகிவிட்டது.
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இம்மாதம் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளதாகவும், ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தினேஷ், நந்திதா ஸ்வேதால், பாலசரவணன், ஜான் விஜய், சாயாசிங், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் ராஜூ இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.