அக்கா அக்கான்னு கூப்பிட்டவனை சோலியை முடிச்சிட்டாங்க..! நிக்சன் எவிக்சன் குறித்து தினேஷ் குரூப்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அக்கா அக்கா என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தவனை பூர்ணிமா என கூப்பிட வைத்து சோலியை முடிச்சிட்டாங்க என தினேஷ் குரூப்பினர் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
பிக் பாஸ் வீட்டில் இரண்டு குரூப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும், கடந்த சனிக்கிழமை கமல்ஹாசன் இது குறித்து கூறியபோது குரூப் ஏ மற்றும் குரூப் பி என பெயர் வைத்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் மாயா, பூர்ணிமா, நிக்சன், விசித்ரா மற்றும் விஜய் வர்மா ஒரு குரூப்பாகவும் தினேஷ், விஷ்ணு, மணி, ரவீனா, ஆகியோர் ஒரு குரூப்பாகவும் இருந்து விளையாடி வந்தனர். இந்நிலையில் தினேஷ் குரூப்பில் இருந்து ரவீனா மற்றும் மாயா குரூப்பில் இருந்த நிக்ஸன் ஆகிய இருவரும் நேற்று எலிமினேஷன் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நிக்சன் எவிக்சன் செய்யப்பட்டது குறித்து தினேஷ், விஷ்ணு மற்றும் மணி பேசிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ’நிக்சனை நல்லா யூஸ் பண்ணிட்டு வெளியேற்றி விட்டார்கள். விக்ரம் சரவணனை யூஸ் பண்ணிட்டு வெளியேற்றியது போல் இவனையும் வெளியேற்றி விட்டார்கள்’ என்று விஷ்ணு கூறுகிறார்
அப்போது மணி ’தம்பியை நல்லா யூஸ் பண்ணி நல்லா வச்சு செஞ்சுட்டாங்க, அக்கா அக்கான்னு நல்லா கூப்பிட்டுகிட்டு இருந்தான், அவனை பூர்ணிமான்னு கூப்பிட வச்சு சோலியை முடிச்சிட்டிங்க என்றும் மணி கூறினார்.
#Dienesh #Mani and #Vishnu conversation #Nixen use panni veliya anupuchutanga
— Sekar 𝕏 (@itzSekar) December 31, 2023
Mani thug life moment 😂#BiggBossTamil7 #BiggBoss7Tamilpic.twitter.com/PWvHwOucVp
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com