பேட் என்பது பக்கத்து வீட்டுக்காரன் மனைவி மாதிரி… சர்ச்சை கமெண்டால் சிக்கிய கிரிக்கெட் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை விடவும் சமீபகாலமாக கிரிக்கெட் வர்ணனையில் கலக்கி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இவர்தான் வர்ணனையாளராக செயல்பட்டார். மேலும் இந்திய ரசிர்களைத் தவிர இவர்கூறும் ஒன்லைன் கமெண்ட்டு பல வெளிநாட்டு வீரர்களுக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் கிரிக்கெட் வர்ணனையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் தினேஷ் கார்த்திக் தற்போது எக்குத்தப்பான ஒரு கமெண்டை கூறி பெண்களின் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பின்பு இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் விளையாடி வருகிறது. அப்படி நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட தினேஷ் கார்த்தி ஒரு கருத்தை விளையாட்டாக கூறி இருந்தார்.
அதாவது கிரிக்கெட் பேட் என்பது பக்கத்து வீட்டுக்காரன் மனைவி மாதிரி. எவ்வளவு நன்றாக இருந்தாலும் அடுத்த வீரரின் பேட்டைத்தான் அனைத்து வீரர்களும் விரும்புகிறோம் எனப் போகிற போக்கில் சொல்லிவிட்டார். தினேஷ் கார்த்திக்கின் இந்த கமெண்டிற்கு சோஷியல் மீடியாவில் கடும் சர்ச்சை கிளம்பி வருகிறது. அதிலும் பெண் ரசிகர்கள் இந்தக் கருத்தை எப்படி ஏற்றுக்கொள்வது என அவரை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் இந்த கமெண்டிற்கு நெட்டிசன்கள் சிலர் “பாவம் தினேஷ் கார்த்திக்கின் பக்கத்து வீட்டுக் காரர்” என அவரை கேலி செய்வதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com