பந்துவீச்சாளரை தமிழில் திட்டிய தினேஷ் கார்த்திக்: வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மும்பை அணிக்கு எதிராக நடந்த போட்டி ஒன்றில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சாளரை தமிழில் திட்டியது ஸ்டெம்பில் இருந்த மைக் மூலம் தெரியவந்துள்ளது
இந்த போட்டியின் 14வது ஓவரை வீசிய பந்து வீச்சாளரை தினேஷ் கார்த்திக் ’என்ன மயிறு பந்து இது’ என்று தமிழில் திட்டுகிறார். அங்கிருந்த வீரர்கள் யாருக்கும் தமிழ் தெரியாது என்றாலும் அவர் கூறியது அப்படியே ஸ்டம்ப் கேமராவில் உடன் இணைக்கப்பட்டிருக்கும் மைக் மூலம் தெரிய வந்ததால் போட்டியை பார்த்து கொண்டிருந்த லட்சக்கணக்கான தமிழர்களுக்கு நன்றாக கேட்டது.
இந்த சீசன் முழுவதும் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தாத தினேஷ், பந்துவீச்சாளரை திட்டியது குறித்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Dinesh Karthik Behind the Stumps ??
— Napster (@NapsterVB) October 16, 2020
Enaya Mayiru Bandhu Idhu ?? ??????
Yow DK ????#IPLT20 #KKRHaiTaiyaar #MIvsKKR pic.twitter.com/PGsN5CEinc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com