நெடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திறமை இருந்தும் பல ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் தவித்துவந்த தினேஷ் கார்த்திக் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். 3 வருடங்களுக்குப் பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடித்து இருப்பதால் ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார். அதேபோல ஐபிஎல் போட்டிகளுக்காக கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் இருந்து வந்தார். ஆனால் 3 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டன. அதே நேரத்தில் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார் என விமர்சிக்கப்பட்டதை அடுத்து கொல்கத்தா அணியில் இருந்தும் அவர் விலகினார்.
இதனால் கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிட்டது என விமர்சிக்கப்பட்ட நிலையில் ஸ்கைஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனத்திற்காக இவர் வர்ணனையாளராகப் பணியாற்றத் துவங்கினார். இந்தத் தருணத்தில் ஐபில் போட்டிகளுக்காக இவர் ஆர்சிபி அணி சார்பாக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்ட தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் 15 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளில் திறமையாக விளையாடி தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்காக இதுவரை விளையாடிய 14 ஐபிஎல் போட்டிகளில் 150 பந்துகளுக்கு 287 ரன்களைக் குவித்து ரசிகர்களை அசரவைத்தார். இதைத் தொடர்ந்து 3 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்காலிக கேப்டனாக கேஎல் ராகுல், துணை கேப்டனாக ரிஷப் பண்ட், ருத்துராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், தீபக் ஹுடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேபோல 3 வருடங்களுக்குப் பிறகு ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் இந்தத் தொடர் போட்டியில் சாஹல், குல்தீப், ரவி புஸ்னாய், அக்சர் படேல் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்களும், புவனேஸ்வர் குமார், ஹர்சல் பட்டேல், உம்ரான் மாலிக் ஆவேஷ் கான், ஆர்ஷ்தீப் ஆகிய 5 வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இடம்பெற்றுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments