தினேஷ் கார்த்திக் பயன்படுத்திய சென்னை லோக்கல் பாஷை: வீடியோ வைரல்

நேற்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. 152 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணிக்கு மும்பை அணி இலக்கு கொடுத்தது. ஆனால் அந்த ரன்களை எடுக்க முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பதால் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் கொல்கத்தா அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததை அடுத்து ஷாருக்கான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்றைய போட்டியின் போது கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி பந்துவீசும் போது தமிழில் சில வார்த்தைகள் தினேஷ் கார்த்திக் பேசியது ஸ்டெம்ப் கேமராவில் குரலுடன் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

இதில் தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தியிடம் சென்னை பாஷையின் ஒரு வார்த்தையை பேசியுள்ளது வைரலாகி வருகிறது. ஏற்கனவே பலமுறை ஐபிஎல் போட்டியின்போது வருண் சக்கரவர்த்தி பந்து வீசும் போதெல்லாம் தமிழில்தான் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று அவர் பேசிய சென்னை லோக்கல் பாஷை வார்த்தை சர்ச்சைக்குள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கர்ணன்' படத்தில் குதிரையில் வரும் சிறுவன் சீரியல் நடிகரா? வைரல் புகைப்படங்கள்

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்தது என்பது தெரிந்ததே

"தொலைந்து போன தங்க நகரம்".....! எகிப்தில் கண்டுபிடிப்பு....!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதையுண்ட நகரம்  ஒன்று, கடந்த செப்டம்பரில் ஏப்ரல் மாதம் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

மோடிக்கு சவால் விடும் லேடி...! சபாஷ் சரியான போட்டி....!

மாத்துவா சமூகத்திற்கு நான் எதையும் செய்யவில்லை என மோடி கூறுகிறார்.

ஆம்பூர் காவலர்கள் உற்சாகமாக வேலை செய்ய புதிய முயற்சி...!

கோடை வெயிலை தாக்குபிடிக்க முடியாத காரணத்தால், போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ச்சி உணவுப்பொருட்களை வழங்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். 

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறதா...! டெல்லி முதல்வர் கடிதம்....!

கொரோனா தீவிரமாகி வருவதால், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.