களத்தில் இருக்கும்போது தமிழில் பேசுவது ஏன்? தினேஷ் கார்த்திக்

  • IndiaGlitz, [Tuesday,March 20 2018]

இந்திய அணியில் விளையாடினாலும், தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய்சந்தருடன் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். இது எதிரணி வீரர்களுக்கும் புரியாமல் இருக்கும் தந்திரமா? என்ற கேள்விக்கு தினேஷ் கார்த்திக் பதிலளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, வாஷிங்டன் சுந்தர், விஜய்சந்தர் இருவருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடன் தமிழில் பேசியே பழகிவிட்டேன். அவர்களிடம் நான் ஆங்கிலத்தில் பேசினால்தான் ஒரு மாதிரியாக இருக்கும். இது வழக்கமாக நடைபெறுவதுதான். இதற்கும் எதிரணி வீரருக்கு புரியாமல் இருக்கும் வகையில் நடந்து கொள்வதற்கும் சம்பந்தமில்லை. என்று கூறினார்

மேலும் வாஷிங்டன் சுந்தர் ஒரு திறமையான வீரர் என்றும், பவர்பிளேவில் பந்து வீசுவது மிகவும் சிரமமான காரியம், அதை அவர் சரியாக செய்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

 

More News

காத்ரீனாவின் அம்மா தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கின்றார் தெரியுமா?

நடிகை காத்ரீனா கைப் குறித்த படங்களின் செய்திகளை விட அவரது காதல் கிசுகிசுக்கள் செய்திகள் தான் அதிகம் வெளிவரும். தற்போதைய நிலவரப்படி அவர் சல்மான்கானின் காதலியாக இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டுகிறது.

யுவன், மெட்ரோ சிரிஷை பாராட்டிய சிம்பு

மெட்ரோ நாயகன் சிரிஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘நா யாருன்னு தெரியுமா?’ என்ற பாடல் மார்ச் 15-ம் தேதி வெளியிடப்பட்டு அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏப்ரல் 14ல் கட்சி பெயர், கொடி அறிவிக்கப்படுமா? ரஜினிகாந்த் பதில்

கடந்த சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட பெயர்களை ஒன்றை அவர் தேர்வு தனது கட்சியின் பெயரை ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு

கமல் குற்றச்சாட்டுக்கு ரஜினி கூறிய பதில்

தமிழக அரசியல் களத்தில் மிக விரைவில் குதிக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியை கிட்டத்தட்ட விமர்சனம் செய்யாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அவர் மீது விமர்சனங்கள் அள்ளி தெளிக்கப்படுகிறது

என் பின்னால் இருப்பது ஒரே ஒருவர் தான்: சென்னை திரும்பிய ரஜினி

ரஜினி குறித்து பெரும்பாலானோர் செய்து வரும் விமர்சனம் அவரது பின்னால் பாஜக இருக்கின்றது என்பதுதான். இன்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இதற்கு பதிலளித்தார்.