உலக லெவன் டி-20 அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் வீசிய இரண்டு கடுமையான புயல்கள் காரணமாக அந்நாட்டின் ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. இந்த மைதானங்களை சீரமைக்க நிதி திரட்டும் வகையில் ஒரு டி-20 போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டிக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், உலக லெவன் அணிக்கும் ஒரு டி-20 போட்டி வரும் 31ஆம் தேதி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் உலக லெவன் அணிக்கு இங்கிலாந்து நாட்டின் இயான் மார்கென் கேப்டனாக இருப்பார். மேலும் இந்த அணியில் பாகிஸ்தானின் ஷோயப் மாலிக், ஷாகித் அப்ரிதி, இலங்கையின் தெசேரா பெரிரா, வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹாசன், தமிம் இக்பால், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்தி இடம்பெற்றுள்ளார்.

அதேபோல் இன்னொரு இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவும் இந்த அணியில் உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணீயில் கார்லோஸ் பிராத்வொயிட், சாமுவேல் பாத்ரி, ராயட் எம்ரிட், ஆந்த்ரே பிளெட்சர், கிறிஸ் கெயில், எவின் லூயிஸ், ஆஷ்லே நர்ஸ், கீமோ பால், ரோவ்மான் பாவெல், டேனிஷ் ராம்தின், ஆந்தரே ரசல், மார்லான் சாமுவேல்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை அமலாபாலின் புதிய  வைரல் வீடியோ

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள  திரையுலகில் நடிகை அமலாபால்  பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். அவரது நடிப்பில் உருவான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது.

நீட் தேர்வு: தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம், சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்த ஆண்டு நீட்தேர்வு எழுதும் தமிழக  மாணவர்கள் பலருக்கு கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.வி.சேகர் கைது குறித்து சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

நான்கு நாட்களில் இரண்டு முறை திருமணம் செய்த தமிழ் நடிகை

காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய தமிழ் படங்களிலும், ஒருசில கன்னட, மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை மேக்னாராஜ்.

தேசிய விருதை புறக்கணித்த 'டூலெட்' இயக்குனர் செழியன்: காரணம் என்ன?

சமீபத்தில் தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு விருது அறிவிப்பில் தமிழக திரைப்பட துறை புறக்கணிக்கப்பட்டதாகவும்