உண்மையான 'மாஸ்டர்' இவர்தான்: நடராஜன் டுவீட்

உண்மையான மாஸ்டர் இவர்தான் என தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் புகழ் நடராஜன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் தமிழகம் மற்றும் பரோடா அணிகளுக்கு இடையே சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி நடந்தது. இதில் தமிழக அணி மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வெற்றி குறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள நடராஜன், ‘சையத் முஷ்டாக் அலி கோப்பை எங்கள் அணிக்கு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. தமிழக அணியின் இந்த வெற்றிக்கு முழுக்காரணம் திறமையும் விடாமுயற்சியும் ஆகும். இந்த நம்பமுடியாத சாதனைக்கு முற்றிலும் பெருமைக்குரியவர் தினேஷ் கார்த்திக் அண்ணா தான். அவருடைய தலைமையிலான அணி, குழு முயற்சியுடன் பெற்ற இந்த வெற்றிக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள். தினேஷ் கார்த்திக் அண்ணா தான் உண்மையான மாஸ்டர் பிளாஸ்டர் என்று நடராஜன் குறிப்பிட்டுள்ளார். நடராஜனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழக அணி வெற்றிக்கோப்பையுடன் உள்ள புகைப்படங்களையும் நடராஜன் தனது டுவிட்டில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

சர்ச்சைக்குரிய பிக்பாஸ் போட்டியாளர் கொரோனாவால் மரணம்!

சர்ச்சைக்குரிய பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவர் காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

'அருண் விஜய் 33' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகர்!

நடிகர் அருண் விஜய் நடிக்க இருக்கும் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 

அய்யா, அண்ணன், மாமா: இளையராஜாவின் புதிய ஒலிப்பதிவு கூடம் குறித்து சூரியின் டுவீட்!

இசைஞானி இளையராஜாவின் புதிய ஒலிப்பதிவு கூடம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம்.பிரிவியூ தியேட்டர் இருந்த இடத்தில் இன்று முதல் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

'மாஸ்டர்' படம் பார்க்க விஜய்யின் வெறித்தனமான ரசிகை செய்த வேலையை பாருங்க!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியானது என்றும் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பதும்

3500 கிமீ பயணம்: சரத்குமார்-ராதிகாவின் வீடியோ வைரல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றன