ஒவ்வொரு ஃபிரேமையும் ரசித்தேன்: தினேஷ் கார்த்திக் பாராட்டிய படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். நேற்று நடந்த 3வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கத்தில், விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இந்த படத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் தான் ரசித்து பார்த்ததாகவும், இந்த படத்தின் பாடல்கள், குறிப்பாக 'காதலே காதலே' பாடல் என்னை மிகவும் கவர்ந்தன என்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு பாராட்டுக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் ஒரு மிகப்பெரிய விஜய்சேதுபதி ரசிகர் என்றும் அவருடைய நடிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் கூறிய தினேஷ் கார்த்திக், தான் மட்டுமின்றி வாஷிங்டன் சுந்தர், அபினவ் முகுந்த் ஆகியோர்களும் இந்த படத்தை ரசித்ததாக தெரிவித்துள்ளார். தினேஷ் கார்த்திக்கின் இந்த டுவீட்டுக்கள் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது.
What a beautiful movie
— DK (@DineshKarthik) November 26, 2018
96
I'm in love with it. my fav song kathalae kathalae, whatta song ❤️
Loved every frame in the movie and the music too .
Been the biggest fan of @VijaySethuOffl for sometime now.but was blown away by 96.amazing.
— DK (@DineshKarthik) November 26, 2018
Govind vasantha , outstanding.kathalae on loop.@WashingtonSund3,@mukundabhinav,@basu2013 are Big fans of this movie too.@ashwinravi99 how bout u?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments