ஒரே சிக்ஸில் ஹீரோவாக மாறிய தினேஷ் கார்த்திக்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்கள் இடம்பிடிப்பது ஒரு காலத்தில் அரிதாக இருந்தது. ஆனால் தற்போது இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிப்பதே நம்ம தமிழக வீரர்கள் என்பது அவ்வப்போது நிரூபணம் ஆகி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இலங்கை சுதந்திரதின கோப்பையின் இறுதி போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற 167 ரன்கள் இலக்கு என்ற நிலையில் களமிறங்கியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடியால் ஓரளவு இலக்கை நெருங்கினாலும் கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இரண்டு ஓவர்களில் 36 ரன்கள் என்ற கடினமாக இலக்கு இருந்தது.
இந்த நிலையில் தான் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தனது அதிரடியை ஆரம்பித்தார். 19வது ஓவரில் அவர் அடித்த 24 ரன்களால் வங்கதேச அணி அதிர்ச்சி அடைந்தது. இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டாலும், கடைசி ஓவரில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. முதல் நான்கு பந்துகளில் 4 ரன்களே எடுக்கப்பட்டதால் கடைசி இரண்டு பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் 5வது பந்தில் விக்கெட் வீழ்ந்ததால் இந்தியாவின் வெற்றிக்கு ஒரே ஒரு பந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டிய இக்கட்டான நிலை. சிக்ஸ் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் சொல்லி வைத்தால் போல் மிண்டும் தனது அதிரடியால் தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடிக்க, மைதானமே குலுங்கியது. ஒரே ஒரு சிக்ஸ் அடித்து கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் இடம்பெற்றுவிட்டார் தினேஷ் கார்த்திக். இந்திய வீரர்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வந்தனர்.
இந்திய அணியின் இன்னொரு தமிழக வீரரான அஸ்வின் ரவிச்சந்திரன் உள்பட பல இந்திய வீரர்களும், முன்னாள் வீரர்களும் தினேஷ் கார்த்திக்கை பாராட்டி வருகின்றனர். மேலும் அவருக்கு நேற்று ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி இன்னொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. நேற்றைய போட்டியில் ஹீரோவாக மாறிய தினேஷ் கார்த்திக்கு நமது வாழ்த்துக்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments