போயஸ் கார்டனில் தினேஷ் கார்த்திக்-தீபிகாவின் கனவு இல்லம்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்து வரும் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் இலங்கையில் நடந்த மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்தியாவின் ஹீரோவாக மாறினார். இந்த போட்டி முடிந்து சில நாட்கள் ஆகிவிட்டபோதிலும் இன்னும் அவர் சமூகவலைத்தளங்களின் டிரெண்டில் உள்ளார்.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் மற்றும் அவரது மனைவியும் ஸ்குவாஷ் வீராங்கனையுமான தீபிகாவும் சமீபத்தில் தங்களது புதிய வீட்டிற்கு மாறியுள்ளனர். விஐபிக்கள் வசிக்கும் சென்னையின் ஒரு முக்கிய பகுதியான போயஸ்கார்டனில் தினேஷ் கார்த்திக் மற்றும் தீபா தம்பதியினர் ரசித்து ரசித்து புதிய வீடு கட்டியது குறித்து கூறிய வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீட்டின் ஹால், பெட்ரூம், கிச்சன் மற்றும் தங்களுடைய விளையாட்டு பொருட்களை வைக்கும் அறைகளை கட்ட எப்படி திட்டமிட்டோம், எந்த வண்ணம் தேர்வு செய்தோம், என்பதை அவர்கள் இருவரும் அந்த வீடியோவில் விளக்கியுள்ளனர். மேலும் இந்த வீடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வீடு அருகே உள்ளது என்பதையும் தினேஷ் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

 

More News

பெண் வேட புகைப்படம் குறித்து அனிருத் தரப்பின் விளக்கம்

இணையதளங்களில் இளம் இசைப்புயல் அனிருத்தின் பெண் வேட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில்தான் அனிருத் பெண் வேடத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

திரையரங்க வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்: நாளை முதல் இயங்கும் என அறிவிப்பு

சென்னை தவிர தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் கடந்த 16-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வந்ததால் திரையங்குகள் இயங்கவில்லை.

இது இயலாமை அல்ல; இழிவான அரசியல்: மத்திய அரசை போட்டுத்தாக்கும் கமல்

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை அமைப்பதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு சுணக்கம் காட்டி வருவது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்து வருகின்றன

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் திருமண நாள் கொண்டாட்டம்

இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது திருமண நாளை நேற்று உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடினார்.

அடுத்த படம் குறித்து ராஜமெளலியின் அதிகாரபூர்வ அறிவிப்பு

ராஜமெளலியின் அடுத்த படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில் தற்போது ஒரு சிறு வீடியோ மூலம் தனது அடுத்த படம் குறித்த தகவல்களை ராஜமெளலி தெரிவித்துள்ளார்.