close
Choose your channels

தீபாவளி ரேஸில் திடீரென இணைந்த தினேஷ் படம்

Thursday, November 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தீபாவளி திருநாளான நவம்பர் 6ஆம் தேதி தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' படமும் அதே தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட விஜய் ஆண்டனியின் 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் திடீரென பின்வாங்கியது.

இந்த நிலையில் தினேஷ் நடித்த 'களவாணி மாப்பிள்ளை' திரைப்படம் நவம்பர் 6 முதல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெற்றி அடைய இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ், ஆதித்திமேனன், ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை காந்தி மணிவாசகம் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ரகுநாதன் என்பவர் இசையமைத்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment