ரஜினியின் 'கபாலி' படத்தில் ஜீவா

  • IndiaGlitz, [Friday,February 12 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அட்டக்கத்தி' பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'கபாலி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள 'அட்டக்கத்தி' தினேஷ் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் இன்று காலை பேட்டியளித்தார்.

'கபாலி' படத்தில் தினேஷின் கேரக்டர் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், 'கபாலி' படத்தில் என்னுடைய கேரக்டர் பெயர் ஜீவா. மற்றபடி இந்த படத்தின் கதை என்னவென்று எனக்கே தெரியாது. இயக்குனர் ரஞ்சித் என்ன செய்ய சொன்னாரா? அதை செய்துவிட்டு வந்துவிட்டேன்' என்று கூறினார்.

மேலும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்தபோது தனக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்ததாகவும், இந்த மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டமே என்றும் அவர் கூறிய தினேஷ், தான் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'விசாரணை' திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது நடிப்பை ரஜினிகாந்த் பாராட்டியதை மறக்கவே முடியாது என்றும் தெரிவித்தார்.