கமல் சார் உங்க டீமா? மறைமுகமாக கேட்ட தினேஷ்..! மாயாவின் அபார நம்பிக்கை..!

  • IndiaGlitz, [Thursday,November 09 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் மீதே தற்போது மாயா கேங்கிற்கு பயமில்லாமல் போய்விட்டது என்பது அவர்கள் பேசும் பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் இன்று நடந்த பில் டாஸ்க்கில் ’நீங்கள் பில்லை கேட்கும்போதே கொடுத்திருக்க வேண்டியதுதானே, அப்போது எந்த பிரச்சனையும் வந்திருக்காதே’ என்று தினேஷ் கேள்வி எழுப்பும் போது கேப்டன் மாயா ’கமல் சாரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறார்.

அப்போது கடுப்பான தினேஷ் ’எல்லாவற்றையும் கமல் சாரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றால்’ என்று கூறி நிறுத்திவிட்டார். அதற்கு அர்த்தம் ’கமல் சார் உங்கள் டீமா’ என்று கேட்க வருவதாக தான் இருந்தது. இதனை புரிந்து கொண்ட மாயாவும் ’கமல் சாரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றும் மறுபடியும் கூறி தினேஷை மேலும் கடுப்பேற்றினார்.

இதனை அடுத்து மாயா குரூப் தனியாக ஆலோசனை செய்யும் போது ’நம்ம சைடும் நிறைய தப்பு இருக்குது, கண்டிப்பா கமல் சார் கேட்பார்’ என்று மாயா கூறினார். அப்போது பூர்ணிமா ’ஏதாவது தப்பு பண்ணிட்டு, வீக் எண்ட்ல கமல் சார் கேட்பார், கழுவி ஊத்துவார், அப்ப சாரி சார்ன்னு சொல்றதே நமக்கு வழக்கமாக போயிருச்சு’ என்று கூற மாயா சிரிக்கிறார்.

மொத்தத்தில் பிக் பாஸ் மீதும் பயமில்லை, கமல்ஹாசன் மீதும் பயம் இல்லை என்ற நிலை தான் தற்போது மாயா கேங்கிடம் உள்ளது என்றது தெளிவாக தெரிய வருகிறது.