கேப்டனை 'டேய்' என்று சொல்லும் அமுல் பேபி ... துள்ளி குதிக்கும் மாயா.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,November 15 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆனவுடன் விறுவிறுப்பு அதிகம் ஆகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரதீப் வெளியேறிய பின்னர் மாயா - பூர்ணிமா குரூப் மற்றும் விசித்ரா குரூப் இடையே நடக்கும் சண்டைகள் காரசாரமாக இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் கேப்டன் தினேஷுக்கு பிக் பாஸ் ஒரு சீக்ரெட் டாஸ்க் கொடுக்கிறார். இதனை அடுத்து அவர் ’யாரும் சரியாக வேலை செய்யவில்லை, அதனால் தான் தேவையான பொருட்கள் வரவில்லை’ என்றும் பிக் பாஸ் கூறியதாக போட்டியாளர்களிடம் கூற, அதற்கு விஷ்ணு கோபம் அடைகிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே போடா வாடா, டேய் என்று சொல்ல, தினேஷை விஷ்ணு நரி என்றும், விஷ்ணுவை தினேஷ் அமுல் பேபி என்று சொல்ல, கிட்டத்தட்ட அடிதடி வரை செல்கிறது.

இந்த சண்டையை மற்ற அனைத்து போட்டியாளர்களும் அமைதியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, மாயா மட்டும் துள்ளி குதித்து விஷ்ணுவுக்கு ஆதரவாக தினேஷிடம் சண்டை போடுகிறார். மொத்தத்தில் இன்றைய எபிசோடு முழுக்க முழுக்க சண்டை சச்சரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.