'எனக்கு டிக்கெட் டு ஃபினாலே முக்கியம் கிடையாது.. தினேஷை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விசித்ரா..!

  • IndiaGlitz, [Thursday,December 28 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் இரண்டு போட்டியாளர்கள் நேருக்கு நேர் பேசி ஒருவர் இன்னொருவரை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் என்பது பிக் பாஸ் கொடுத்த குறிப்பு என்பதை முதல் புரமோவில் பார்த்தோம்.

இந்த நிலையில் தினேஷ் மற்றும் விசித்ரா ஆகிய இருவரும் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசுகின்றனர். முதலில் தினேஷ் பேசும்போது, ‘உங்களுக்கும் எனக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு என்ன வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் நான் உங்களை இதுவரை தனிப்பட்ட முறையில் பேசியது கிடையாது’ என்று கூறினார்.

அப்போது விசித்ரா ’எனக்கு டிக்கெட் டு ஃபினாலே முக்கியம் கிடையாது, ஆனால் உங்களுக்கும் எனக்கும் இடையே ஏன் ஒரு கடினமான நிலை உள்ளது என்பதுதான் எனக்கு புரியவில்லை. சில விஷயங்களை நீங்கள் பண்ணும் போதும், பேசும் போதும், எனக்கு மிகவும் மன வருத்தமாக உள்ளது. ஒரு போட்டியாளர் இன்னொருவரை பற்றி தொடர்ச்சியாக நெகட்டிவாக ஒருதலைபட்சமாக பேசும்போது வெளியில் இருந்து பார்க்கும் மக்கள் ஒரு வேளை அது உண்மையை இருக்கலாம் இல்லையா என்று தான் நினைப்பார்கள்’ என்று கூற அதை அதிர்ச்சியுடன் தினேஷ் கேட்பதுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

ஆரம்பத்தில் இருந்து தினேஷ் மற்றும் விசித்ரா இடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் இன்றைய பேச்சுவார்த்தைக்கு பின்னர் கருத்து வேறுபாடு நீங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விஜயகாந்த் மறைவு: ஸ்டாலின், அமித்ஷா, ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன், அண்ணாமலை இரங்கல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அகில இந்திய அளவிலும் தமிழக அளவிலும் பல அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், காங்கிரஸ்

படப்பிடிப்பில் இருக்கும் போது விஜயகாந்த் மறைவு செய்தி கேட்ட ரஜினி.. உடனடியாக செய்த செயல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டதும் உடனடியாக 'வேட்டையன்' படத்தின் இன்றைய படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kill or Stay.. டிக்கெட் டு ஃபினாலேவில் புதிய டாஸ்க்.. வெளியேறுவது யார் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தரும் புள்ளிகள் அடிப்படையில் அதிக புள்ளிகள்

விஜயகாந்த் உடல் அடக்கம் எங்கே எப்போது? குடும்பத்தினர் அறிவிப்பு..!

தேமுதிக தலைவர் இன்று காலை 6.10 மணிக்கு காலமான நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

எதற்கும் அஞ்சாத துணிச்சல் உடையவர் விஜயகாந்த்: கமல்ஹாசன் இரங்கல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சற்றுமுன்