'எனக்கு டிக்கெட் டு ஃபினாலே முக்கியம் கிடையாது.. தினேஷை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விசித்ரா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் இரண்டு போட்டியாளர்கள் நேருக்கு நேர் பேசி ஒருவர் இன்னொருவரை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் என்பது பிக் பாஸ் கொடுத்த குறிப்பு என்பதை முதல் புரமோவில் பார்த்தோம்.
இந்த நிலையில் தினேஷ் மற்றும் விசித்ரா ஆகிய இருவரும் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசுகின்றனர். முதலில் தினேஷ் பேசும்போது, ‘உங்களுக்கும் எனக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு என்ன வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் நான் உங்களை இதுவரை தனிப்பட்ட முறையில் பேசியது கிடையாது’ என்று கூறினார்.
அப்போது விசித்ரா ’எனக்கு டிக்கெட் டு ஃபினாலே முக்கியம் கிடையாது, ஆனால் உங்களுக்கும் எனக்கும் இடையே ஏன் ஒரு கடினமான நிலை உள்ளது என்பதுதான் எனக்கு புரியவில்லை. சில விஷயங்களை நீங்கள் பண்ணும் போதும், பேசும் போதும், எனக்கு மிகவும் மன வருத்தமாக உள்ளது. ஒரு போட்டியாளர் இன்னொருவரை பற்றி தொடர்ச்சியாக நெகட்டிவாக ஒருதலைபட்சமாக பேசும்போது வெளியில் இருந்து பார்க்கும் மக்கள் ஒரு வேளை அது உண்மையை இருக்கலாம் இல்லையா என்று தான் நினைப்பார்கள்’ என்று கூற அதை அதிர்ச்சியுடன் தினேஷ் கேட்பதுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வந்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்து தினேஷ் மற்றும் விசித்ரா இடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் இன்றைய பேச்சுவார்த்தைக்கு பின்னர் கருத்து வேறுபாடு நீங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments