நரேந்திரமோடியின் பேரன் ராகுல்காந்தியா? அமைச்சரின் பேச்சால் பரபரப்பு 

முன்னாள் முதல்வர்களும், ஆளுமை உள்ள தலைவர்களுமான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத இந்த தேர்தலில் பல காமெடிகள் நடந்து வருகிறது. கூட்டணி அமைப்பதிலேயே இரு பக்கமும் பல காமெடிகள் நடந்து முடிந்துவிட்ட நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரத்திலும் பல காமெடிகள் அரங்கேறி வருகின்றன.

அவற்றில் ஒன்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசுகையில், 'ஒரு பக்கம் இந்தியாவின் பிரதமர் பதவிக்காக நரேந்திரமோடி போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் அவருக்கு எதிராக அவருடைய பேரன் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்' என்று பேசினார். நரேந்திரமோடியின் பேரன் ராகுல்காந்தியா? என அவருடைய பேச்சை கேட்டவர்கள் வியந்தனர்.

ஏற்கனவே அதிமுக வேட்பாளர் ஒருவர் சகோதர் கனிமொழிக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது நரேந்திரமோடியின் பேரன் ராகுல்காந்தி என்று ஒரு அமைச்சரே பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக கடந்த ஆண்டே தகவல் வந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூலூர் அதிமுக எம்.எல்.ஏ மரணம்:  நாளிதழ் படித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64

'பரியேறும் பெருமாள்' ரீமேக்கில் நடிக்கும் ஏவிஎம் வாரிசு

கடந்த ஆண்டு வெளிவந்த 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் அமோக பாராட்டை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

16 பேர்களை கொன்று தின்ற புலி: உண்மை சம்பவ படத்தில் சிபிராஜ்

கடந்த 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் 16 பேர்களை கொன்று தின்ற புலியை சுட்டுக்கொலை செய்த வனத்துறை அதிகாரியின் கேரக்டரில் சிபிராஜ் நடிக்கவுள்ளார். 

தினகரன் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்!

தேர்தல் காலத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது, சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்து கட்சியில் இருந்து வெளியேறுவது, கட்சியே குறிப்பிட்ட நபர்களை நீக்குவது