இந்திய பிரதமர் மோடியா? மன்மோகன் சிங்கா? அமைச்சரின் உளறல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாகவே அதிமுக அமைச்சர்கள் வாய்தவறி உளறிவருவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாடகி சுதா ரகுநாதனை சுதா ரங்கநாதன் என்றும், பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவின் தந்தை மரணம் குறித்து விசாரிக்க சென்ற அமைச்சர் ஆர்பி உதயக்குமார் எச் ராஜாவின் தந்தை மரணத்திற்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்து உளறியதும் அனைவரும் அறிந்ததே.
அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிடவில்லை, நாங்கள் அவரை பார்க்கவேயில்லை பொய் சொன்னோம் எனக் கூறி பீதியை கிளப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில் டெங்கு ஆய்வு குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை சந்தித்ததாக கூறினார்
மன்மோகன் சிங் பிரதமர் பதவியை இழந்து, மோடி பிரதமர் பதவியேற்று மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் பிரதமர் மன்மோகங் சிங் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைவிட கொடுமை என்னவெனில் அமைச்சர் தனது தவறை உணராமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததுதான். அமைச்சரின் இந்த பேச்சின் வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments