இடிக்கப்படும் பழம்பெரும் தியேட்டர்: பிரபல இயக்குனரின் சோகப்பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தான் சிறுவயதில் படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்த தியேட்டரை இடிக்க இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தியை அறிந்து பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் மிகுந்த சோகத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்
திண்டுக்கல் நகரில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வந்த தியேட்டர் என்.வி.ஜி.பி. சமீபத்தில் திண்டுக்கலுக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக சென்ற போது இந்த தியேட்டருக்கு இயக்குனர் மிஸ்கின் சென்றுள்ளார். தான் சிறு வயதில் தனது தந்தையுடன் இந்த தியேட்டரில் ’என்டர் தி டிராகன்’ உள்பட பல படங்கள் பார்த்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்
என்.விஜிபி தியேட்டருக்கு மிஷ்கின் சென்றபோது அந்த தியேட்டர் ஓடவில்லை என்றும் தற்போதைய இன்டர்நெட் உலகில் திரையரங்குகளில் படம் பார்க்க யாரும் வரவில்லை என்றும் அந்த தியேட்டர் உரிமையாளர் கூறியுள்ளார். மேலும் அடுத்த வாரம் இந்த தியேட்டரை இடிக்க போவதாகவும் அவர் கூறியதை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்த இயக்குனர் மிஷ்கின் தியேட்டரின் உள்ளே சென்று ஒரு சீட்டில் அமர்ந்து திரையை அண்ணாந்து பார்த்தபடியே சில நிமிடங்கள் உட்கார்ந்து இருந்தார்
தான் சிறுவயதில் ஆசை ஆசையாக படம் பார்த்த ஒரு தியேட்டர் இடிக்கப்படுவது அவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments