ஸ்வீட் கொடுக்க வந்த பெண் ஊழியருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த அதிகாரி: வைரலாகும் வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகம் ஒன்றில் பெண் அதிகாரி ஒருவர் உயர் அதிகாரிக்கு பிறந்தநாள் ஸ்வீட் கொடுக்க வந்தபோது அந்த பெண்ணை இழுத்து பிடித்து லிப்லாக் முத்தம் கொடுத்த அதிகாரியின் சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில் பேரூராட்சி உயரதிகாரி கோபிநாத் என்பவர் தன்னுடைய அறையில் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது அங்கு ரோஸ் நிற சேலை அணிந்த பெண் ஊழியர் ஒருவர் வருகிறார். தனக்கு பிறந்த நாள் என்று கூறி அவர் உயரதிகாரிக்கு ஸ்வீட் கொடுக்கின்றார். அப்போது ஸ்வீட்டை எடுத்துக் கொண்ட உயர் அதிகாரி கோபிநாத், திடீரென அந்த பெண்ணை இழுத்து உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கிறார்.

இதுகுறித்த சிசிடிவி வீடியோவை யாரோ மர்ம நபர்கள் இணையதளத்தில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்த உயர் அதிகாரிகள் கோபிநாத்தை சஸ்பெண்ட் செய்து துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் உள்பட அலுவலக ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

சிசிடிவி கேமரா இருக்கிறது என்பது தெரிந்தும் பேரூராட்சி உயரதிகாரி இளம் பெண்ணை இழுத்து பிடித்து முத்தம் கொடுத்த விவகாரம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.