சிறையில் அடைத்தாலும் பின்னர் வெளியே வந்து பதிலடி கொடுப்போம்: டிடிவி தினகரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று காலை முதல் ஜெயா டிவி உள்பட சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் சற்றுமுன்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் இந்த வருமான வரிச்சோதனையின் பின்னால் மத்திய அரசு இருப்பது தெளிவாக தெரிகிறது. என்னுடைய அடையாறு வீட்டில் எந்த சோதனையும் இல்லை, புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் மட்டுமே சோதனை நடந்து வருகிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி குறித்து விமர்சித்த நிலையில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை நடந்து வருகிறது. எங்களை மிரட்டி பார்க்க நடைபெற்று வரும் இந்த சோதனையால் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சோதனையின் பின்னால் உள்ள கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம்.
இந்த சோதனைக்கு பின்னர் எங்களை தூக்கில் ஒன்றும் போட முடியாது. இருபது ஆண்டுகள் என்னை சிறையில் அடைத்தாலும் 75வயதில் வெளியே வந்து பதிலடி கொடுப்பேன்' என்று தினகரன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments