தினகரன் கைது! அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
இரட்டை இலை சின்னத்தை பெற கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக புகார் சுமத்தப்பட்டு அதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு டிடிவி தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தினகரன் கைது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவரது கைது குறித்து அரசியல் தலைவர்கள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்
பா.ஜ.மாநில தலைவர் தமிழிசை: தினகரன் கைது விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது. இதன் மூலம் பா.ஜ.,வால் தமிழகத்தில் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நாஞ்சில் சம்பத்: 'தினகரனின் கைதால் அதிர்ச்சி அடையவில்லை. தினகரன் கைது பின்னால் சதித்திட்டங்கள் உள்ளன. இந்த கைது மூலம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது பா.ஜ.க. தினகரனை தெரியாது என கூறியிருக்கிறார் சுகேஷ். அரசியல், சட்ட ரீதியாக இப்பிரச்னையை எதிர்கொள்வோம்', என்றார் நாஞ்சில் சம்பத்.
இந்திய கம்யூ. முத்தரசன்: பா.ஜ.க மீது சந்தேகம் ஏற்படுகிறது. தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தினகரனை கைது செய்ய சுகேஷை பயன்படுத்தியிருக்க வாய்ப்பு அதிகம். தமிழகத்தில் காலூன்ற அ.தி.மு.கவை பலவீனப்படுத்துகிறது பா.ஜ.க. அதிமுகவை கபளீகரம் செய்து விட்டது பா.ஜ.க
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா: முறையாக 37 மணி நேரம் விசாரணைக்கு பின்னரே தினகரன் கைது செய்யப்ப்டடுள்ளார். தினகரன் கைதுக்கு பா.ஜ. காரணம் என கூறுவதை ஏற்க முடியாது.
கர்நாடக மாநில அ.தி.மு.க., அம்மா அணியின் புகழேந்தி: அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். தாம் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பார்.
ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் பொன்னையன்: தினகரனின் கைது அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சி. நாடே காரி துப்பும் அளவுக்கு தினகரனின் செயல் உள்ளது
காங்கிரஸ் செய்திதொடர்பாளர் கோபண்ணா: தினகரன் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். டிடிவி தினகரன் கைது தமிழகத்துக்கு தலைகுனிவு. அரசியலில் இருந்து அதிமுவை அப்புறப்படுத்த வேண்டும். தவறிழைத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: 'தினகரனின் தரப்பை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றது உண்மை என்றால் பணத்தை வாங்க முயன்ற தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அந்த அதிகாரி யார்?.. தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அந்த நபர் குறித்து விசாரிக்க வேண்டும். இதில் அரசியல் சதி இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதை தவிர்க்க முடியவில்லை'
ஓ.பன்னீர் செல்வத்தின் அணியை சேர்ந்த கே.சி.பழனிசாமி: முன் ஜாமீனை தினகரன் ஏன் தவிர்த்தார் என தெரியவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விஷயம் கொடுமையானது. முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு தினகரன் விசாரணையை எதிர்கொண்டிருக்க வேண்டும். தினகரனின் கைதுக்கும், எங்கள் அணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com