கூவத்தூராக மாறுகிறதா குற்றாலம்? தினகரனின் அதிரடியால் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,October 22 2018]

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தபோது இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியும் இந்த வழக்கின் விசாரணையை முடித்துவிட்டு தீர்ப்பு தேதியை ஒத்திவைத்துள்ளார்.

இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 24ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு ஆளும்கட்சியை ஆட்டம் காண வைக்கும் என்பதாலே இந்த பரபரப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க டிடிவி தினகரன் அறிவுறுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரிலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பெங்களூரிலும் தங்கியிருந்த நிலையில் தற்போது குற்றாலத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன் கூறியபோது, 'தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரும் புஷ்கர விழாவில் கலந்துகொள்ளவே குற்றாலம் செல்கிறோம் என கூறியுள்ளார்.

More News

நல்லவேளை நான் வடசென்னை' படத்துல நடிக்கலை: விஜய்சேதுபதி

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

லேகா வாஷிங்டன் 'மீடூ' குற்றச்சாட்டு குறித்து சின்மயி

மீடூ'வில் கோலிவுட் திரையுலகினர் பலர் தற்போது தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பதிவு செய்து வருகின்றனர்

ஆண்கள் திருமண வயதை குறைக்க வழக்கு தொடுத்தவருக்கு அபராதம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி

ராணுவத்தில் சேரவும், தேர்தலில் வாக்களிக்கவும் ஆண்களின் வயது 18 என்று இருக்கும் நிலையில் திருமணத்திற்கு மட்டும் ஏன் 21 வயது என்றும், ஆண்களின் திருமண வயதை 21ல் இருந்து 18ஆக குறைக்க வேண்டும்

நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய எச்.ராஜா! எதற்கு தெரியுமா?

சமீபத்தில் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது பல்வேறு கட்சியினர்

சபரிமலை விவகாரம்: கமல்ஹாசனை வம்புக்கு இழுத்த எஸ்.வி.சேகர்

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கியதில் இருந்தே இந்த விவகாரம் அரசியல் தலைவர்களால் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.