விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் மெலடி இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Thursday,September 20 2018]

கோலிவுட் திரையுலகில் சமீபத்தில் 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை செய்த மெலடி இசையமைப்பாளர் டி.இமான், விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்திற்குக் டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பது குறித்து கருத்து தெரிவித்த டி.இமான் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்க்ஷன்ஸ் படத்திற்கு இசையமைக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

'வாலு', 'ஸ்கெட்ச்' படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பு பணியும் செய்யவுளனர். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.