சென்னையில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது ஷாருக்கானின் 'தில்வாலே'

  • IndiaGlitz, [Sunday,December 13 2015]

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் திரைப்படங்கள் வட இந்தியாவில் மட்டுமின்றி சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆவது வழக்கம். அவர் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' உள்பட பல படங்கள் சென்னையில் மாபெரும் வசூலை பெற்று தந்துள்ளது.

இந்நிலையில் ஷாருக்கானின் அடுத்த படமான 'தில்வாலே' வரும் 18ஆம் தேதி சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெருவாரியான முக்கிய திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஷாருக்கான், கஜோல், வருண்தவான், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார்.