'கோட்' போஸ்டரில் உள்ள ஹெலிகாப்டருக்கு பெரிய பின்னணி இருக்குது: திலீப் சுப்பராயன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற இருப்பதாகவும் விஜய் உட்பட படக்குழுவினர் இலங்கை செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரியும் திலீப் சுப்பராயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவங்களை கூறியுள்ளார். 'கோட்’ படம் நன்றாக வந்து கொண்டிருப்பதாகவும் இந்த படம் உண்மையில் சூப்பராக இருக்கும் என்றும் ஆடியன்ஸ்கள் நன்றாக என்ஜாய் பண்ணுவார்கள் என்று கூறினார்
மேலும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும் தயாரிப்பாளர் கேட்டதை எல்லாம் தந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். மேலும் இப்ப வரைக்கும் ஐந்தாறு ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு இருப்பதாகவும் இன்னும் அதிக காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய இருப்பதாகவும் கதையே மிகவும் சூப்பரான கதை என்றும் எமோஷனல், ஆக்சன் மற்றும் ஒரு டைம் டிராவல் கதையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் சில காட்சிகளில் டூப் போடலாம் என்று நானே கூறினால் கூட அதற்கு விஜய் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும் ஒவ்வொரு காட்சியின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சூப்பராக செய்திருக்கிறார் என்று ஊக்கமளிப்பார் என்றும் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி விஜய்யை பார்த்தேனோ அதே போல் தான் இன்றும் இருக்கிறார் என்றும் விஜய் அண்ணா விஜய் அண்ணா தான் என்றும் தெரிவித்தார்
மேலும் பொங்கல் தினத்தில் வெளியான போஸ்டரின் பின்னணியில் இருக்கும் ஹெலிகாப்டர் மற்றும் பாம் வெடிக்கும் காட்சி போஸ்டர்காக உருவாக்கப்பட்டது அல்ல என்றும் அந்த காட்சிக்கு ஒரு பெரிய பின்னணி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அவரது பேட்டியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout