உதயநிதியை சந்திக்க போகிறேன்.. 'வாரிசு' தியேட்டர் பிரச்சனை குறித்து தில்ராஜூ
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இரு திரைப்படங்களுக்கும் சமமாக தியேட்டர்கள் பிரித்துக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சுமார் 800 தியேட்டர்களில் 400 தியேட்டர்கள் விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கும் 400 தியேட்டர்கள் அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டை பொருத்தவரை விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார் என்றும் அவருக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அவர் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் அவரிடம் ‘வாரிசு’ படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்க போவதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நம்பர் ஒன் விஜய் தான் என்றும் அவருக்கு அதிக பிசினஸ் இருப்பதால் அவரது படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினை தில் ராஜூ சந்தித்தால் அதன் பிறகு ‘வாரிசு’ படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Dil Raju pic.twitter.com/38IlXxzGTW
— Karthik Ravivarma (@Karthikravivarm) December 15, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com