சசிகலாவின் சலுகைகளை கண்டுபிடித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் டிரான்ஸ்ஃபர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக சிறைத்துறை மேலதிகாரிகள் ரூ.2 கோடி வரை லஞ்சம் பெற்றிருப்பதாகவும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சுமத்தியிருந்தார். இந்த குற்றச்சாட்டு இரு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தினால் ரூபா ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற கருத்து நிலவியது. 'சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவது தொடர்பாக தான் அளித்துள்ள அறிக்கையில் உறுதியாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தன் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் ரூபா கூறியிருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக சிறைத்துறை டி ஐ ஜியான ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாராக 'திடீர்' பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்ற நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் மேலும் சர்ச்சைகளை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout