சசிகலாவின் சலுகைகளை கண்டுபிடித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் டிரான்ஸ்ஃபர்

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக சிறைத்துறை மேலதிகாரிகள் ரூ.2 கோடி வரை லஞ்சம் பெற்றிருப்பதாகவும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சுமத்தியிருந்தார். இந்த குற்றச்சாட்டு இரு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தினால் ரூபா ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற கருத்து நிலவியது. 'சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவது தொடர்பாக தான் அளித்துள்ள அறிக்கையில் உறுதியாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தன் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் ரூபா கூறியிருந்தார்.

இந்த நிலையில் கர்நாடக சிறைத்துறை டி ஐ ஜியான ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாராக 'திடீர்' பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்ற நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் மேலும் சர்ச்சைகளை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு ஏன் இல்லை? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அதிமுக அரசு மீது கடுமையான விமர்சனம் செய்து வருவதும், அதற்கு தமிழக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையும் இருந்து வருகிறது.

தைரியம் இருந்தால் கமல் அரசியலுக்கு வரட்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருவதாகவும், ஊழல் விஷயத்தில் பீகாரை தமிழகம் மிஞ்சிவிட்டதாகவும் கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு கொடுத்த சிம்பு

சமீபத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இங்கிலாந்தில் 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியபோது தமிழில் மட்டுமே அதிக பாடல்கள் பாடியதாக கூறி வட இந்தியர்கள் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும்போதே வெளியேறியதாக சர்ச்சை எழுந்தது.

அபிராமி ராமநாதனுக்கு விஷால் நன்றி கடிதம்

அபிராமி திரையரங்க உரிமையாளரும், தமிழக திரையங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான அபிராமி ராமநாதன் நேற்று தனது திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு தனியாக கட்டணம் இல்லை என்று அறிவித்தார்.

வேஷ்டி அணிந்தால் அனுமதி கிடையாதா? வணிக வளாக நிர்வாகிகளிடம் பிரபல இயக்குனர் ஆவேசம்

கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்றுக்கு பிரபல திரைப்பட இயக்குனர் அசிஷ் அவிகுந்தக் நேற்று நடிகை தேவலீனா சென் அவர்களுடன் சென்றிந்தார்.