கபாலி-விஜய் 59 இடையே உருவான வித்தியாசமான போட்டி

  • IndiaGlitz, [Wednesday,November 11 2015]

பிரபல தயாரிப்பாளரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான கலைப்புலி எஸ்.தாணு, தற்போது ஒரே சமயத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய்யின் 'விஜய் 59'.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. கபாலி மலேசியாவிலும் 'விஜய் 59' சென்னையிலும் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் வரும் ஜனவரி இறுதிக்குள் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

தற்போது இந்த இரண்டு படங்களில் முதலில் வெளிவரும் படம் எது? என்பது கேள்விக்குறியாக உள்ளது. 'கபாலி' தமிழ்ப்புத்தாண்டுக்கும், விஜய் 59' கோடை விடுமுறைக்கும் வெளிவரும் என்று கூறப்பட்ட போதிலும் தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடாததால், முதலில் வெளிவரும் படம் எது? என்பதை அறிய திரையுலக ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.