மாரடைப்பால் மறைந்தார் மாரடோனா: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

உலக கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவருக்கு வயது 60

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது அபாரமான ஆட்டத்தால் பெற்ற கால்பந்தாட்ட வீரர் மாரடோனா, சமீபத்தில் மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனை அடுத்து அவர் அர்ஜெண்டினாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பினார்

இந்த நிலையில் திடீரென அவருக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்

மூளை அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாகவே இருந்ததாகவும் அவரது உடல்நிலையை கண்காணிக்க பிரத்யேகமாக செவிலியர் ஒருவர் பணி அமர்த்தப்பட்டு இருந்ததாகவும் இருப்பினும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்

கால்பந்தாட்ட உலகில் தனக்கென தனி ராஜ்ஜியம் அமைத்து கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற மாரடோனாவின் மறைவு கால்பந்தாட்ட உலகிற்கு பேரிழப்பு ஆகும். அவரது மறைவிற்கு முன்னாள், இந்நாள் கால்பந்து வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

More News

லட்சுமி விலாஸ் வங்கி… கை மாற்றப்படுகிறதா???

இந்தியா முழுவதும் கிளைப்பரப்பி இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கி அதன் நிதி நிலைமை தொடர்பாக தற்போது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின்

தகதகவென பற்றி எரியும் விமானம்…வைரல் வீடியோ!!!

ஸ்பெயின் நாட்டு விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று பற்றி எரியும்

உங்களுக்கு கொரோனா பாசிடிவ்… தகவல் அறிந்தவுடன் அதிர்ச்சியில் உயிரிழந்த மூதாட்டி!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் 65 வயதான மூதாட்டி ஒருவர் தனக்கு கொரோனா இருக்கும்

கற்பழிப்பு வழக்கில் சிக்கினால் ஆண்மை நீக்கத் தண்டனை… பரபரப்பை ஏற்படுத்தும் புது சட்டம்!!!

அண்டை நாடான பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து 5000 கன அடி நீர்: 20 பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணி அளவில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்