ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பிச்சென்ற ஆப்கன் அதிபர்? உருக்கமான விளக்கம்!

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கைப்பற்றினர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டின் தலையெழுத்தே மாறிப்போனது. அதிபராக இருந்த அஷ்ரப் கானி “நாட்டு மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை“ எனக் கூறிவிட்டு இராணுவ ஹெலிகாப்டரில் சில அதிகாரிகளுடன் தப்பிச்சென்றார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்கானி 4 கார்கள் நிறைய பணத்துடன் காபூல் விமான நிலையத்திற்கு வந்ததாகவும் தான் கொண்டுவந்த பணத்தை ஹெலிகாப்டரில் நிரப்பிய பின்னரே அங்கிருந்து சென்றதாகவும் ரஷ்ய செய்தித்தொடர்பாளர் ஒருவர் தகவல் வெளியிட்டு இருந்தார். மேலும் பணத்துடன் வந்ததால் தஜிகிஸ்தான் அவருக்கு அனுமதி மறுத்ததாகவும் பின்பு ஓமனில் அவர் தரையிறங்கியதாகவும் தகவல் வெளியாகியது.

ஆனால் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அதிபருக்கும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விளக்கம் அளித்து இருக்கிறது.

இந்நிலையில் நாட்டு மக்களை இக்கட்டான சூழலில் தவிக்கவிட்டுவிட்டு சென்றது குறித்தும் ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் சென்றதாக விமர்சிக்கப்படுவது குறித்தும் அதிபர் அஷ்ரப் கானி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்து இருக்கிறார்.

அந்த வீடியோவில், “எனது காலனிகளை அணியக்கூட எனக்கு நேரம் இல்லாத நிலையில் நான் எப்படி அவ்வளவு பணத்தைக் கொண்டு வருவேன். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எனது பாதுகாப்பு அதிகாரிகள் எனக்கு அறிவுறுத்தியதோடு உடனே வெளியேறுமாறு ஆலோசனை வழங்கினர். அதன்பேரில்தான் நான் வெளியேறினேன்.

தாலிபான்களால் ஏற்படும் அச்சுறுத்தலை தவிர்க்கவே நான் அங்கிருந்து தப்பி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் குடிபெயர்ந்துள்ளேன். நான் காபூலிலேயே இருந்திருந்தால் நிச்சயம் வன்முறை வெடித்திருக்கும். தாலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கான் படைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தாலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்க எண்ணினேன்.

தற்போது அரசின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தாலிபான்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். நான் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்” என்று உருக்கமாக தெரிவித்து உள்ளார்.

More News

மதுக்கோப்பையை முத்தமிடும் கடல் அலை: ஆண்ட்ரியா வெளியிட்ட அழகிய வீடியோ!

பிரபல நடிகை ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் அங்கிருந்து அவர் நீச்சல்குள, நீச்சலுடை புகைப்படங்கள் உள்பட பல அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இயக்குனர் பாலா மீது சிங்கம்பட்டி ஜமீன் தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு!

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அவன் இவன்'. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை

வரலாறு காணாத கொடூர நிலநடுக்கம்? ஹைதியில் 2,000ஐ நெருங்கும் உயிரிழப்பு!

கரீபியன் அருகேயுள்ள தீவு நாடான ஹைதியில் கடந்த சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

எதிர்ப்புக்கு மத்தியிலும் படு கிளாமரில் பாலிவுட் நடிகை… வைரல் புகைப்படம்!

சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகை ராதிகா ஆப்தேவை, பாலிவுட் சினிமாவை விட்டே தடைசெய்ய வேண்டும்

கமல்ஹாசனை எதிர்த்து வானதி வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப சந்தோஷம்: குஷ்பு 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கமலஹாசனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றது தனது ரொம்ப சந்தோசம் என குஷ்பு பேட்டி என்று கூறியுள்ளார்.