பாட்டு இல்லை, ரொமான்ஸ் இல்லை.. ரஜினிக்கு முன் ஜெயிலர்' படத்தை ரிஜக்ட் செய்த பிரபலம்..!

  • IndiaGlitz, [Sunday,September 24 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் முதன் முதலில் ஜெயிலர்’ படத்தின் கதையை தயார் செய்து முடித்தவுடன் பிரபல நடிகர் ஒருவரிடம் சென்று கதை கூறியதாகவும் ஆனால் அவர் இந்த படத்தில் தனக்கு பாட்டு இல்லை, ரொமான்ஸ் இல்லை என்று கூறி ரிஜெக்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பிரபல நடிகர் தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

அதன் பிறகு தான் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் நெல்சன், ஜெயிலர்’ கதையை கூறிய போது ’தன்னுடைய வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் அவர் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.

சிரஞ்சீவி மட்டும் இந்த படத்தை ஒப்புக்கொண்டு நடித்திருந்தால் மிகப்பெரிய ஹிட் படமாக அவருக்கு இந்த படம் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தான் சிரஞ்சீவி மனம் மாறி இனிமேல் வயதுக்கேற்ற கேரக்டரில் ரொமான்ஸ் பாடல்கள் இல்லாமல் நடிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.