நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த விஜய்

  • IndiaGlitz, [Tuesday,March 22 2016]
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த விழாவில் பேசிய விஜய் தனது ரசிகர்களுக்காக ஒரு குட்டி கதையை சொன்னார்.

அந்த கதையில் முன்னாள் சீன அதிபர் மாவோ என்பதற்கு பதிலாக முன்னாள் ரஷ்ய அதிபர் மாவோ என்று கூறினார். இதை ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பலர் சுட்டிக்காட்டினர்.
இந்த தகவல் அவருடைய பி.ஆர்.ஓ முலம் விஜய்க்கு தெரிய வர இதுகுறித்து விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார். 'பெரிய மேடைகளில் சில கருத்துக்களை நாம் தெரிவிக்குமோது இதுமாதிரியான தவறுகள் சிலசமயம் ஏற்பட்டு விடுகிறது. இதற்காக நான் வருந்துகிறேன். இருப்பினும் நான் கூறிய கதையின் கருத்து எனது ரசிகர்களிடம் சென்றடையும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

More News

முதன்முதலாக கே.வி.ஆனந்துடன் இணையும் இரண்டு பிரபலங்கள்

கே.வி.ஆனந்த் இயக்கிய 'அனேகன்', ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 'வை ராஜா வை', மற்றும் ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' என ஹாட்ரிக் வெற்றி ....

ரஜினிக்கு டுவிட்டர் வழங்கிய சிறப்பு அந்தஸ்து

சமூக இணையதளங்களில் ஃபேஸ்புக் இணையதளத்திற்கு அடுத்த இடத்தில் உள்ள டுவிட்டர் ஆரம்பமாகி இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது....

ரஜினியின் 'கபாலி'யுடன் இணைந்தது விஜய்யின் 'தெறி'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அட்டக்கத்தி' இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது...

பாலிவுட்டில் எண்ட்ரி ஆகிறார் 'அட்டக்கத்தி' நடிகை

'கபாலி' இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் படமான 'அட்டக்கத்தி' படத்தில் அமுதா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை...

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம். முழு விபரங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடக நடிகர்கள் உள்பட உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்....